திறக்கப்படாத அரசு புதிய கட்டிடம்

Update: 2022-08-14 15:45 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பொம்மிடி ஊராட்சியில் கிராம மக்களின் தேவைக்காக பொம்மிடி- பாப்பிரெட்டிப்பட்டி மெயின் ரோட்டில் கிராம ஊராட்சி சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் கிராம மக்கள் தனியார் இ-சேவை மையங்களுக்கு சென்று வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அரசு கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதாவது அங்கு இ-சேவை மையம் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

-கண்ணன், தர்மபுரி.

மேலும் செய்திகள்