நாகை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நீலாயதாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குந்தி குளத்தில் குப்பைகள், கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மன வேதனை அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை