தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பிரிவு அருகே மேரீஸ்கார்னர் பாலம் இறக்கத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை.