தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகர் அருகே சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை