நாகை மாவட்டம் நாகை நகர் பகுதியில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரெயில்நிலையம், வெளிப்பாளையம் போன்ற இடங்களில் ஏராளமான பன்றிகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. சாலைகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை
=========================