முட்புதர்களை அகற்ற வேண்டும்

Update: 2022-08-09 15:34 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை அடுத்த முத்தம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் அமைந்துள்ளது. அந்த பள்ளி வளாகத்திற்குள் செடி, கொடிகள், முட்கள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முட்புதர்களை அகற்றி தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம், முத்தம்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்