தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பூண்டி பெரியார் நகரில் உள்ள மின் கம்பத்தில் கான்கிரீட் கம்பிகள் பெயர்ந்து மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த மின் கம்பம் எந்த நேரமும் விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பாபநாசம்.