கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலம் அருணாச்சலேசுவரர் கோவில் எதிரே ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளைவு வாகன ஓட்டிகளுக்கு தெரியாதவகையில் சாலையில் செடிகள் வளர்ந்து உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வளைவில் உள்ள செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்கள், உச்சுவாடி, வடபாதிமங்கலம்.