திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியின் முக்கிய வடிகால் வாய்க்காலான சட்ருட்டி வாய்க்கால் மதுக்கூர் சாலை பகுதியில் இருபுறமும் ஆகாயத்தாமரைகள் வாய்க்காலை முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. இதன்காரணமாக இந்த பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மன்னார்குடி