மதுக்கடையை இடமாற்றம் செய்யலாமே!

Update: 2022-08-08 16:48 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே அரசு மதுபானக்கடை உள்ளது. புதிய பஸ் நிலையத்திற்கு பல்வேறு மாவட்ட, மாநிலத்தில் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த மதுக்கடை பஸ் நிலையம் எதிரே அமைந்துள்ளதால் அங்கு வரும் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு தகராறு செய்வதை காணமுடிகிறது. மேலும் அங்கு வரும் பயணிகளுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. எனவே பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகமது ரபிக், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்