கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பஸ் நிலையம் பகுதியில் ஆங்காங்கே சிமெண்டு தரை சேதமடைந்து பள்ளம் பள்ளமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பயணிகள், பொதுமக்கள் பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்து சேதமடைந்துள்ள சிமெண்டு தரையை சீரமைத்து மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-புருசப்பன், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.