ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்கா அருகே மிகப்பெரிய சந்திராம்பிகை ஏரி உள்ளது. இந்த ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து படர்ந்து ஏரி நீர் தெரியாத அளவிற்கு முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. எனவே ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை, செடி, கொடிகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-பாண்டியன், ஓசூர்.