திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், நாகநல்லூர் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் புதிய கட்டிட பணிகள் துவக்கப்பட்டு, ஒருவருடமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பள்ளியின் சுற்றுச்சூழல் கெடுவதுடன், மழை நேரங்களில் பள்ளியில் படிக்கும் 124 மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.