செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-05 16:26 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த சந்தாபுரம் ஊராட்சி 4-வது வார்டு பகுதிகளில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. விஷப்பூச்சிகள் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்றி தூய்மையாக வைக்க வேண்டும்.

-சாரதி, சந்தாபுரம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்