கிருஷ்ணகிரி மாவட்டம் பெலத்தூரை அடுத்த சூடாபுரம் கிராமத்தில் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் பள்ளிக்கட்டிடத்தை சீரமைக்க முன்வருவார்களா?
-பெருமாள், சூடாபுரம், கிருஷ்ணகிரி.