சேலம் மாநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ராஜாராம் நகர், சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாக்கடை கால்வாய்களிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. கொசுக்கள் கடிப்பதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவுகிறது. எனவே அனைத்து தெருக்களிலும் கொசுமருந்து அடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வீரமணி, ராஜாராம் நகர், சேலம்.