சேதமடைந்த மின் கம்பம்

Update: 2022-08-03 13:32 GMT

தஞ்சை மாநகராட்சி அண்ணா சாலையில் இருந்து தெற்கலங்கம் செல்லும் சாலை பிரியும் இடத்தில் மாவட்ட மைய நூலகத்தின் அருகில் உள்ள ஒரு மின்கம்பத்தின் மேல் பகுதியானது சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளது. இதனால் எந்த நேரமும் விழும் நிலை உள்ளது. இதனால்,இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றித் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அன்பழகன், தஞ்சாவூர்

மேலும் செய்திகள்