அரியலூர் மாவட்டம், கடுகூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் கடந்த சில மாதங்களாகவே ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரின்றன. இதன் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகளும், பொதுமக்களும் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும், இவை திடீரென சண்டையிட்டுக்கொண்டு வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்கள் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.