விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. மேலும் இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் துரத்தி சென்று விபத்தை ஏற்படுத்தி செல்கின்றது. எனவே சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?