பள்ளியில் அடிப்படை வசதிகள் தேவை

Update: 2025-08-10 11:47 GMT

வந்தவாசி தாலுகா மழையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. பள்ளியை சுற்றி குளங்கள், முட்புதர் உள்ளதால் மாணவ-மாணவிகளுக்கு அச்சமாக உள்ளது. பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாலும் கூடுதால் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பள்ளி கட்டிடம் 50 ஆண்டு கால பழமையான கட்டிடம் ஆகும். பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். பள்ளியில் கழிவறை வசதி இல்லை. பள்ளி சாலை மோசமான நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

-ப.விஜயகுமார், சமூக ஆர்வலர் , மழையூர்.

மேலும் செய்திகள்