அதேபோல் சமீப காலமாக காட்பாடி பகுதியில் செங்குட்டை மாரியம்மன் கோவில் தெரு, ஜான் தெரு மற்றும் பல தெருக்களில் ஏராளமான குரங்குகள் கூட்டமாக வந்து வீடுகளில் உள்ள பொருட்களை நாசம் செய்கின்றன. அத்துடன் பெண்கள், குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. வீட்டின் மின் இணைப்பு ஒயர்கள், கேபிள் ஒயர்களை பிடித்துத் தொங்கி அறுத்து விடுகின்றன. மக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் குரங்குகளை வனத்துறை பிடித்து காட்டில் விட வேண்டும்.
-பி. துரை, கல்புதூர்.