ஆரணி கோட்டை மைதானம் உள்விளையாட்டு அரங்கில் மழைநீர் சேகரிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டி திறந்தவெளி தொட்டியாக உள்ளது. சுமார் 5 அடி ஆழமுள்ள தொட்டியை மூடி போட்டு வைக்க வேண்டும். இல்லையேல், மைதானத்தில் விளையாடும் சிறுவர்கள் தொட்டியில் விழுந்து விடும் அபாயம் உள்ளது. இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கமலக்கண்ணன், ஆரணி.