புதுச்சத்திரம்- பரங்கிப்பேட்டை பிரதான சாலையில் ரெயில்வே கேட் அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு மது வாங்கி குடிக்கும் மதுப்பிரியர்கள் போதை தலைக்கேறியதும் அந்த வழியாக செல்பவர்களிடம் விண் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மதுபாட்டில்களை சாலையிலேயே உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.