பண்ருட்டி அருகே மணம்தவிழ்ந்தபுத்தூரில் புதியதாக ரேஷன் கடை கட்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும், அதனை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த கட்டிடம் தற்போது சேதமடைந்து வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காட்சிப்பொருளாக உள்ள புதிய ரேஷன் கடை கட்டிடத்தை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.