ரேஷன்கடை பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

Update: 2026-05-31 18:23 GMT

திமிரியை அடுத்த குப்பம் கிராமத்தில் ரேஷன் கடையை சீரமைத்து புதிய ரேஷன் கடை திறக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். 4 மாதங்களுக்கு முன்பு பழைய ரேஷன் கடையை இடித்து விட்டு புதிய ரேஷன் கடை கட்ட ரூ.9 லட்சத்து 97 ஆயிரம் நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது. இப்போது கட்டி முடிக்கப்பட்டு 2 பகுதியில் கதவுகள் இன்னும் பொருத்தப்படவில்லை. பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது, ஷட்டர் பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரகாஷ், குப்பம்.

மேலும் செய்திகள்