திமிரி ஒன்றியத்தில் இயங்கி வரும் கல்குவாரியில் எம்.சாண்ட், பி.சாண்ட், சிறிய ஜல்லிக்கற்கள், பெரிய ஜல்லிக்கற்கள், ஜல்லி சிப்ஸ் ஆகியவற்றை டிராக்டர்கள், சரக்கு வேன்கள், டிப்பர் லாரிகள் மூலமாக ஆரணி, ஆற்காடு, வேலூர், வாலாஜா மற்றும் சென்னை என பல்வேறு ஊர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. திறந்த வெளியாக கொண்டு செல்வதால் தூசு பறக்கிறது. வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால் விபத்துகள் நடக்கின்றன. எனவே எம்.சாண்ட் மீது வாகனங்களின் மேற்பகுதியை தார்ப்பாய் போட்டு முழுவதுமாக மூடி எடுத்துச் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.
-தர்மலிங்கம், திமிரி.