தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2025-08-10 11:52 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், முதியோர் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதி முழுவதிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 


மேலும் செய்திகள்