செல்பியால் விபத்து

Update: 2022-08-03 11:22 GMT

நாமக்கல் நகரின் மைய பகுதியில் மலைக்கோட்டை உள்ளது. இந்த மலைக்கோட்டை மதில் சுவர் சுமார் 5 அடி உயரம் கொண்டதாகும். இந்த நிலையில் மலைக்கோட்டைக்கு வரும் இளைஞர்கள் சிலர் மதில் சுவர் மீது ஏறி நடப்பது, அங்கு நின்று கொண்டு செல்பி எடுப்பது போன்ற சாகச நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றனர். இதுபோன்ற சமயங்களில் கால்தவறி கீழே விழுந்தால் மரணம் உறுதி என்பதை அறியாமல் இவ்வாறு செயல்படுகின்றனர். எனவே போலீசார் மலைக்கோட்டையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மிதுன், நாமக்கல்.

மேலும் செய்திகள்