கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி கே.சி.சி நகரில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருநாய்கள் தெருவில் செல்லும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக குரைத்துக்கொண்டும், வாகனங்களில் செல்பவர்களை பின் தொடர்ந்து துரத்திக்கொண்டும் செல்கின்றன. மேலும் குழந்தைகள், பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சா.ரவிச்சந்திரன், கே.சி.சி.நகர், ஓசூர்.