தர்மபுரி மாவட்டம் மிட்டாதின்னஅள்ளி ஊராட்சி கொமத்தம்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு காம்பவுண்டு சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் மது அருந்துவது, சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இதனை தடுக்கும் வகையில் பள்ளியை சுற்றி காம்பவுண்டு சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெகன், கொமத்தம்பட்டி, தர்மபுரி.