நிதி ஒதுக்கியும் பணி நடைபெறவில்லை

Update: 2022-08-02 13:40 GMT
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நூலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கு சொந்த கட்டிடம் கட்டவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். நூலக கட்டிடத்திற்காக பேரூராட்சி சார்பில் இடமும் ஒதுக்கப்பட்டது. தற்போது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் நூலக கட்டிடத்திற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டுவதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை. எனவே நூலக கட்டுமான பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்