மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படுமா?

Update: 2022-08-02 13:17 GMT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றாலோ அல்லது குடும்பத்தகராறு என்றாலும் தங்களின் கோரிக்கைகளை முறையிடுவதற்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பெண்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் ஆண்டிமடம் பகுதியில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி