குரங்குகள் தொல்லை

Update: 2022-08-01 14:08 GMT

கிருஷ்ணகிரியை சுற்றி உள்ள மலைப்பகுதிகளில் ஏராளமான குரங்கள் சுற்றி திரிகின்றன. இந்த குரங்கள் கடந்த சில நாட்களாக ஊருக்குள் வர தொடங்கி உள்ளன. அதுவும் கேபிள் வயர்களில் தொங்கி அதை சேதப்படுத்துகின்றன. வீடுகளின் மேல் வைக்கப்பட்டுள்ள டி.டி.எச்.ஆண்டனாக்களை சேதப்படுத்துகின்றன. இதைத் தவிர குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் அட்டகாசம் செய்து வருகின்றன .நாள்தோறும் ௩௦-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து குடியிருப்புகளில் இடையூறு செய்து வருகின்றன. இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஷாஜகான் , கிருஷ்ணகிரி

மேலும் செய்திகள்