திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் சார் பதிவாளர் அலுவலகம், உழவர் சந்தை, கிைளச்சிறை உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இதனால் வேலை நாட்களில் இங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகில் கால்வாயில் சிலாப் உடைந்து நீண்ட நாட்களாக அப்படியே உள்ளது. இந்த வழியாக தான் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து செல்கின்றனர். இந்தப் பள்ளத்தினால் விபத்துகள் ஏற்பட்டு காயங்கள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.
-முத்து, திருவண்ணாமலை.7299006099
-முத்து, திருவண்ணாமலை.7299006099