தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாகலஅள்ளி ஊராட்சி மருளுக்காரன்கொட்டாய் கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் அங்குள்ள அரசு பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரிலேயே மாணவ-மாணவிகள் சிரமத்துடனே நடந்து சென்று வருகின்றனர். எனவே பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றி, மேலும் மழைநீர் தேங்காதபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுபா, பாகலஅள்ளி, தர்மபுரி.