போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை தேவை

Update: 2022-07-31 09:31 GMT
செங்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அந்தக் கிராமப் பகுதிகளில் இருந்து மருத்துவ தேவைக்காக பலர் செங்கம் வருகின்றனர். ஆனால் அவர்கள் போலி மருத்துவர்களிடம் சிக்கி அவதிப்படுகின்றனர். செங்கத்தில் பரமனந்தல், குப்பநத்தம், புதுப்பாளையம், காஞ்சி, முத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் போலி மருத்துவர்கள் அதிகளவில் உள்ளனர். மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலச்சந்திரன், செங்கம்.

மேலும் செய்திகள்