கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சிறுவர்கள் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச்செல்கினர். மேலும் எதிரே வரும் வாகனங்கள் மீது மோதுவது போலவும், காதை கிழிக்கும் அளவிற்கு ஹாரன் அடிப்பது போன்ற செயல்கள் பொதுமக்கள், மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே போலீசார் அந்த பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலு, ஓசூர், கிருஷ்ணகிரி.