அரியலூர் மாவட்டம், கடுகூர் கிராமம், வடக்குத்தெரு சந்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான தார்சாலை வசதி மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி பாதையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.