தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வாரச்சந்தையில் மழைநீர் மற்றும் பஸ்நிலைய கடைகளின் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாததால் தேங்கி நிற்கிறது. இதனால் வாரச்சந்தை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. வாரச்சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மழைநீரை வெளியேற்றி வாரச்சந்தையை தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
-விஜயன், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.