ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்தச்சேரிகுப்பம் கிராமத்தில் இருந்து கரடிகுப்பம் செல்லும் சாலையில், ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள திருப்பத்தில் சாலையையொட்டியவாறு பெரிய கிணறு உள்ளது. அந்தக் கிணற்றை சுற்றி சிறிய அளவில் மட்டுமே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சிறிது தடுமாறினாலும் விபத்தில் சிக்கி கிணற்றுக்குள் விழுந்துவிடுவார்கள். சாலையையொட்டி உள்ள கிணற்றின் தடுப்புச்சுவரின் உயரத்தை அதிகரித்து விபத்து ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்.
-ராஜா, கரடிகுப்பம்.
-ராஜா, கரடிகுப்பம்.