தர்மபுரி மாவட்டம் புதுச்சாம்பள்ளி ஆதிதிராவிடர் தெருவில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு தெருவிளக்கு, குடிநீர், பொதுகழிப்பிடம், மயானத்திற்கு சாலை என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த பகுதி மக்களுக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேகர், புதுச்சாம்பள்ளி, தர்மபுரி.