அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு... ! கண்டு கொள்ளாமல் இருக்கும் வருவாய் துறை அதிகாரிகள்...!!
இராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சி உள்ள தெருக்கள் , அரசு புறம்போக்கு இடங்கள் , கிராம நலனுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள், குளங்கள் , குட்டைகள் , நீர் ஓடைகள் மற்றும் நீர்நிலைகள் போன்ற பல அரசு பொது இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதை இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருந்து வருக்கின்றனர் . ஆக்கிரமிப்புக்களை அகற்றிக்கோரி பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமான பொது மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.