வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-07-27 11:32 GMT


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெரிய தம்பி நகர் விரிவாக்கப் பகுதியில் நீண்ட நாட்களாக மழை தண்ணீர் தேங்கி உள்ளது. இது மேடான பகுதியாக இருப்பதால் தேங்கியுள்ள தண்ணீர் வடிவதற்கு வழியில்லை. இதனால் தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் மழை தண்ணீர் வடிவதற்கு வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கும்பகோணம்.

மேலும் செய்திகள்