அணைக்கட்டு ஒன்றியம் வல்லாண்டராமம் ஊராட்சி புதூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு முறையான கால்வாய் வசதி இல்லாததால், பெரும்பாலான சாலைகளில் லேசாக மழைப் பெய்தாலே மழைநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. ஓரிரு நாட்களாக பெய்த மழையால் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. ஆகையால் எங்கள் பகுதியில் மழைநீர் வடிகால்வசதி கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், வல்லண்டராமம்.