புதுச்சேரி - கடலூர் சாலையில் இடையார்பாளையத்தில் உள்ள சிறிய பாலத்தின் மீது இருந்த மின்கம்பம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீ விபத்தின்போது சேதமடைந்து அந்த வழியாக செல்லும் வாய்க்காலில் விழுந்தது. அந்த மின்கம்பம் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. மேலும் அந்த பகுதியில் மின்விளக்குகள் சரியாக எரியாததால் இருள்சூழ்ந்து கிடக்கிறது. இதனை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.