பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்வா நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 4-வது பிரிவு சாலை பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெருவிளக்கு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தெருவிளக்கு கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால், விஷ ஜந்துக்கள் தீண்டிவிடுமோ என்று இப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருவிளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.