சாய்ந்த நிலையில் மின் கம்பம்

Update: 2026-08-09 19:43 GMT

குடியாத்தம் நடுப்பேட்டை அப்பாக்குட்டி பிள்ளை தெரு வழியாக நகரில் உள்ள முக்கிய பள்ளியான நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த வழியாக குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல இணைப்புச் சாலையாகவும் உள்ளது. இந்தச் சாலையில் உள்ள ஒரு மின் கம்பம் வாகனம் மோதியதால் ஆபத்தான முறையில் சாலையில் சாய்ந்த படி உள்ளது. சாய்ந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

-அருண், குடியாத்தம்.

மேலும் செய்திகள்