மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள மின் விளக்கு பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் மின்சாரம் தேவையில்லாமல் பயன்படுத்தப்பட்டு வருவதால் மின்சார கட்டணமும் அதிகரித்து வருகிறது. அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர் இருந்தும் இரவு, பகல் என எந்த நேரமும் எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்கை பகல் நேரங்களில் அணைக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.