ஓமலூர் தாலுகா செலவடை ஊராட்சிக்குட்பட்ட செலவடை மேடு முதல் ஆரூர்பட்டி ஏரி வரை உள்ள நெடுஞ்சாலையில் போதுமான மின்விளக்கு இல்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுத்து உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்.