மடத்துக்குளம் தாலுகா காரத்தொழுவு கிராமம், பழைய ஆயக்கட்டு வாய்க்கால் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் போதிய பராமரிப்பு இல்லாததால் பலத்த காற்றுக்கு முற்றிலும் சாய்ந்துள்ளது. அந்த மின்கம்பத்துக்கு வரும் மின்சார வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த மின்கம்பம் அகற்றப்படாமல் விட்டுவைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது மின்கம்பம் விழுந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தா காப்படும் மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
பாலன், காரத்தொழுவு.